பாஜக தொகுதி வரையறை கூட்டம் நாடகம் என்கிறார்கள். இந்த நாட்டின் மிகப்பெரிய நடிகர் நரேந்திர மோடிதான் என கேரளா மாநிலம் இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பினோய் விஸ்வம் பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் கர்நாடகா துணை முதலமைச்சர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் கருத்துகளை பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, இதையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள மாநிலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வினோய் விஷ்வம், கொச்சி செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அப்போது வினோய் விஷ்வம் கூறுகையில்..,
இந்தியா பன்முகத்தன்மை கொண்டது, மத்திய அரசு மாநிலங்களை வஞ்சிக்கிறது, தேசியக் கொள்கைகள் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது. நாடாளுமன்ற தொகுதி குறைய வாய்ப்புள்ளது.
நாங்கள் சண்டையிட்டு வெல்வோம், பாஜக இது நாடகம் என்கிறார்கள், இந்த நாட்டின் மிகப்பெரிய நடிகர் நரேந்திர மோடி தான் என்றார். இது நாடகம் இல்லை.
வட மாநிலத்தில் பஞ்சாப், ஒடிசா பங்கேற்றார்கள், இது தேசிய பிரச்சனை, தொகுதி எண்ணிக்கை குறையக் கூடாது, நாங்கள் தொகுதி வரையறைக்கு எதிரானவர்கள் இல்லை, அது வரட்டும், ஆனால் தொகுதி எண்ணிக்கை பாதிக்காத அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.