மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜாகாள்பட்டி ஊராட்சி மறவபட்டியில் மறவபட்டியிலிருந்து கிருஷ்ணாபுரம் வரை 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு 91 லட்சத்தில் தார்சாலை அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்துகொண்டார்.

தொடர்ந்து, ராஜாக்காள் பட்டியில்39.70 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் இசேவை மையம் பாலமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 99 லட்சத்தில் புதிய வகுப்பறை பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான ரூபாய் 75 லட்சத்தில் பூமி பூஜை கீழச்சின்னனம்பட்டியில் 90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜைகளிலும் சோழவந்தான் எம். எல். ஏ .வெங்கடேசன் கலந்து கொண்டார்.
பொறியாளர் பொன்னுச்சாமி, உதவி செயற் பொறியாளர்கள் மதியரசன் ,
சாந்தகுமார் பொறியாளர் அபிராமி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ். பரந்தாமன். முத்தையா. அருண்குமார் விஜயன் வட்டார மருத்துவர் டாக்டர் வளர்மதி
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பண்ணைகுடி தனுஷ்கோடி , ஊர் சேரி செந்தில்குமார், சின்ன இலந்தைகுலம் ராதா, எரம்பட்டி சுந்தர்ராஜன், தொழிலதிபர் டாக்டர் பார்த்திபன், ஒப்பந்தகாரர்கள் ஆண்டிச்சாமி, வடிவேல், பாலமேடு பேரூராட்சி த் தலைவர் சுமதி பாண்டியராஜன், பாலமேடு துணை சேர்மன் ராமராஜ், நகர செயலாளர்
மனோகரவேல் பாண்டியன், முரளி, இளைஞர் அணி சந்தன கருப்பு, பிரசாந்த், தண்டலைசதீஷ், கிளைக் கழக நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.