சென்னை டி.நகர் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் இவருக்கு பூர்விகமாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுமார் 4 கிரவுண்ட் இடம் இருந்து வந்துள்ளது.
நாளடைவில் இவரது இடத்தை வளர்மதி என்பவர் ஆக்கிரமித்து கொண்டதாக அவர் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்த வளர்மதி நீதிமன்றத்தில் 5 முறை வழக்குத் தொடர்ந்து அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளனர்.
மேலும் இடம் ரவிச்சந்திரனுக்கு சொந்தம் என கோர்ட்டில் ஜட்ஜ்மெண்ட் வழங்கி உள்ளனர்.
இருந்த போதிலும் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் மற்றும் பட்டா நகல், இடத்தின் பத்திர நகல்கள் இருந்த போதும் எந்த ஒரு அதிகாரிகளும், காவல்துறையினரும் உதவி செய்ய வரவில்லை என அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.