• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நிலவுக்கு அனுப்ப இருந்த ஆர்ட்டிமிஸ் விண்கலம் நிறுத்தம்!

ByA.Tamilselvan

Aug 30, 2022

நிலவுக்கு ஆர்ட்டிமிஸ் விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை நாசா கடைசி நேரத்தில் நிறுத்தியது.
1969ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது. ஐந்த திட்டம் ‘அப்பல்லோ’ என்றழைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ஆர்ட்டிமிஸ் திட்டம் தொடங்கப்பட்டது. சோதனை முயற்சியாக மனிதர்களை போன்ற பொம்மைகளை அனுப்ப உள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த பிரமாண்ட இந்த ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால் எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்ட்டிமிஸ் ராக்கெட் திட்டத்தை நாசா நிறுத்தியது.
கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.