• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 30ஆம் தேதி தொடக்கம்…

Byகாயத்ரி

Mar 28, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு நேற்று விவாதித்தது. இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் 30-ம் தேதி தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.