சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யனார் காலனி, காந்திநகர், லட்சுமி நகர் ,உள்ளிட்ட பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் பலராமன் ஆனையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பிலிப்பாசு முன்னிலை வகித்தார், சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட பூத்து கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் பூத்து கமிட்டி பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளரக கலந்து கொண்ட அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மன கே டி ராஜேந்திர பாலாஜி பேசியது.
அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது அதற்கு அடுத்தபடியாக சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது இதன் மூலம் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் ஏராளமானோர் தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.
ஆனால், திமுக பொறுப்பேற்று நான்காண்டுகளில் பயனாளிகள் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பட்டாசு விபத்தில் காயமடைந்தால் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதிமுக ஆட்சியில் சிவகாசியில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவு மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கையிருப்பு இல்லாமல் தனியார் ஆஸ்பத்திரிக்கு பொதுமக்களை அனுப்பி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளன. குறிப்பாக சிவகாசி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்டு முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பத்தாம் ஆண்டு நிறைவுறும் தருவாயில் கூட ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கி அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
சாட்சியாபுரம், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு திமுக எதிர்கட்சியாக இருந்த போது முட்டுக்கட்டை போட்டது. தற்போது ஆளுங்கட்சியாக வந்த பிறகு ரயில்வே மேம்பால பணியை திமுகதான் கொண்டு வந்தது என பொதுமக்களை ஏமாற்றி வருகின்றன. சாட்சியாபுரம் மேம்பால பணிக்கு திமுக உரிமை கொண்டாட முடியாது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் நான் முழு முயற்சி எடுத்துக் கொண்டிருந்ததால் அனைத்து குக் கிராமங்களிலும் தண்ணீர் தடையில்லாமல் வழங்கப்பட்டது இதனால் கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை இருந்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழில் முழுமையாக பாதுகாக்கப்பட்டது ஆனால் நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனை தீர்க்க திமுக அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.என கூறினார்.