அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை அடுத்து திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக் குழு தீர்மானங்கள் குறித்து ஓபிஎஸ் தரப்பு சார்பாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில். இந்த வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிய வந்தது. அதை கொண்டாடும் விதமாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.