• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சட்டசபை கூட்டத்திலிருந்து வெளியேறிய அ.தி.மு.க மற்றும் வி.சி.க…

Byகாயத்ரி

Jan 5, 2022

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநர் உரையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதாக பாராட்டினார். மேலும், இந்திய அளவில் மு.க. ஸ்டாலின் சிறந்த முதல்வராக இருந்து வருகிறார். பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.ஆளுநர் உரையை வாசிக்க தொடங்கியதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. அதேபோல், அ.தி.மு.க. கட்சியும் வெளிநடப்பு செய்தது.வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. அ.தி.மு.க. திட்டங்களை முடக்குவதாகவும் குற்றம்சாட்டியது.