

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று (ஜன.5) மாலை 6 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.எ.ஏ.க்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவுறுத்தியுள்ளார். ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையொட்டி மாலை 6 மணியளவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடைபெறுகிறது.
