• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டுரூ.70 தலைகவசம் வழங்கிய நடிகர்

முதல்வர்மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை ஒட்டி சேலத்தில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது மக்களுக்கு 70 ரூபாய்க்கு தலைக்கவசம் வழங்கி திரைப்பட நடிகர்….விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகிறது
அந்த வகையில் சேலத்தில் தனியார் ஹெல்மெட் கடை உரிமையாளர் முகமது காசிம் என்பவர் தமிழக முதல்வர்70 வது பிறந்த நாளான இன்று 70 நபர்களுக்கு இனிப்புடன் 500 ரூபாய் மதிப்பிலான ஐஎஸ்ஐ தரமான தலைக்கவசத்தை 70 ரூபாய்க்கு திரைப்பட நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் தலைமையில் வழங்கினார்.


இதுகுறித்து திரைப்பட நடிகர் பெஞ்சமின் கூறுகையில் தமிழக அரசு சாலை பாதுகாப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது குறிப்பாகதமிழக முதல்வர் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சாலை விபத்தில் தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதியுடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் இவர்களுக்கு துணையாக இருக்கும் வகையிலும் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்து வகையில் தமிழக முதல்வர் பிறந்த நாளான இன்று 70 நபர்களுக்கு 70 ரூபாய்க்கு தரமான ஐ எஸ் சி முத்திரையுடைய தலைக்கவசத்தை வழங்குகிறோம் என தெரிவித்தார்.