• Wed. Mar 22nd, 2023

மதுரையில் பெரிய நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

ByKalamegam Viswanathan

Mar 1, 2023

மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது சூப்பர் சரவணா ஸ்டோர். இந்த நிறுவனத்தில், திடீரென தீப்பற்றியது. இருந்தபோதிலும், இந்த தீ விபத்தில் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தரப்பில், நிறுவனத்தின் உள்ளே இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவித்தனர் .


தீ கொழுந்து விட்டு எரிந்ததால், பொது மக்களை அவ்வழியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. பல்வேறு இடங்களிலிருந்து இருந்து, பல்வேறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்க தொடங்கின.இந்த தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால், ஒத்தக்கடை மேலூர் ஆகிய வழியில் செல்கின்ற வாகனங்கள் மெதுவாக சென்றன. தகவல் கிடைத்ததும், போலீசார்விரைந்து வந்து போக்குவரத்து சீர் செய்தனர்.
தீயை அனைத்து முடித்தவுடன் தான், சேதம் மதிப்பு தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *