

கோவை காந்தி பார்க் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 51வது ஆண்டு தைப்பூச திருத்தேர் திருவிழா தை 1ம் தேதி முதல் துவங்கி தை 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கிராமசாந்தி, கணபதி வழிபாடு, வாஸ்து சாந்தி, சுவாமி திருவீதி உலா, யாகசாலை பூஜை மற்றும் தீபாரதனை, திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இதில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன், அறங்காவலர்கள் ஆர்.எஸ்.மகேஸ்வரன் பழனியப்பன், விஜயலட்சுமி,ராஜா, மேலாளர் முத்துக்குமார், கோவில் குருக்கள் விஜயகுமார், கண்ணன், கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

