• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ் புலிகள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.

தமிழ் புலிகள் கட்சியின். 15. ம் ஆண்டு துவக்க நாள் முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டம். சார்பாக.அம்மாபேட்டை ஒன்றியம் சிங்கம்பேட்டை படவல் கால்வாய்பஸ் ஸ்டாப் அருகில் தேசிய நீலச்சங்கொடி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதன் பின் பல்வேறு மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய முன்னுருக்கும் மேற்பட்டோர் தங்களை தமிழ் புலிகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வேங்கை பொன்னுசாமி தலைமை தாங்கி வரவேற்றார். முரளி அம்மாபேட்டை ஒன்றிய தொண்டரணி செயலாளர் முன்னிலை வகித்தார்.

கிளைச் செயலாளர் தினேஷ்,இளம்புலி கிளை செயலாளர்,தனுஷ் கிளை தொண்டரணி செயலாளர்,அஜித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.மற்றும் குருசெம்பன் ஈரோடு வடக்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் வெங்கடேஷ் மாவட்ட நிதிச் செயலாளர் தமிழ் குமார் பவானி தொகுதி செயலாளர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடிவில் கோவிந்தராஜ் நன்றி உரை ஆற்றினார்.