• Fri. Jun 28th, 2024

பிரதமர் மோடிக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து

Byவிஷா

Jun 10, 2024

3வது முறையாக இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மொத்த 543 தொகுதிகளிலும் 7- கட்டங்களாக தேர்தல் நடைபெற்று அதற்கான முடிவுகளும் கடந்த ஜூன்-4 வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்கள் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதன் மூலம் நரேந்திர மோடி 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்கும் விழாவானது நேற்று மாலை நடந்தது, 3-வது முறையாக பதவியேற்கும் மோடிக்கு உலகெங்கிலும் இருந்து பல நாட்டுகளின் பிரதமர்களின் வாழ்த்துக்கள் குவிந்தது. இந்நிலையில், தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் அவரது எக்ஸ் தளத்தில் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் எக்ஸ் தளத்தில், “இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுக் கொண்ட திரு. நரேந்திரமோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என பதிவிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *