• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி -ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்

சட்டமன்றத்தில் 375.25 கோடி ரூபாய் காண திட்டங்களுக்கு அனுமதி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு தொகுதியின்  தேவைகளை எடுத்துக் கூறி நிறைவேற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலம் மற்று,விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் கைத்தறி துறைமானிய கோரிக்கையின் மீது ஜெயங்கொண்டம்  தி.மு.க எம்எல்ஏ கண்ணன் பேசுகையில்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கோரிக்கைகள் உடையார்பாளையம் வருவாய் வட்டத்தை பிரித்து, தா பழூரை, தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.  கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற  வேண்டும். கொள்ளிடத்திலிருந்து பொன்னேரிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஆகிய பகுதிகளில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.ஆண்டிமடம் புதிய தாலுக்காவாக உள்ளதால், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கும்பகோணம் – ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம் வரை புதிய அகல இரயில்பாதை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.கைத்தறி மற்றும் துணிநூல் துறை  கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 200-ல் இருந்து 300 யூனிட்டாகவும், விசைத்தறி நெவாளர்களுக்கு 750-ல் இருந்து 1000 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கிய முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அரகம், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்கிய நெசவாளர்கான ஆயுள் காப்பீட்டு திட்டம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற நெசவாளர்களுக்கு வழங்கப்படும் ஓதியத்தை 1000-ல் இருந்து 1500 – ரூபாயாக உயர்த்தி வழங்க  வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 30 கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் 26-சங்கங்கள் எனது ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ளது. அலுலவலர்கள் மற்றும் நெசவாளர்களின் நிர்வாக வாதிக்காக. ஜெயங்கொண்டம் நகரில்  கைதரித்துறை உதவி இயக்குநர் அலுவலகம்  தொடங்க ண்டும்.  செங்குந்தத்தில் கைத்தறி ஜவுளி பூங்கா  அமைக்க வேண்டும்.  நெசவாளர்கள் நெய்த புடவைகளை “கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்து, ஆந்திர மாநிலம் “ஆப்-கோ” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து விற்பனை செய்ய வேண்டும். சயனடிக் ஹாக்கி கிரவுண்ட் செயற்கை இழை ஹாக்கி மைதானம்  அரியலூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.ஹாண்ட் பால் கிரவுண்ட்மாவட்ட மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கைப்பந்து மைதானம் தேவைப்படுகிறது. இந்த விளையாட்டிற்கு விளையாட்டு விடுதி மாணவர்கள் இருப்பதால்  மைதானம் தேவைப்படுகிறது..க்ஷஜெயங்கொண்டம் மி ஸ்டேடியம் 2013 ஆம் ஆண்டு 22 இலட்சம் ரூபாயில் கட்டப்பட்டது. அதை சீரமைப்பதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மினி ஸ்டேடியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள (3கோடி ரூபாய்) நிதியினை பயன்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
அக்கா மெடேஷன் சென்டர்   மாவட்ட அளவில் அளவில் பயிற்சி முகாம்கள் நடைபெறும் பொழுது மாணவர், மாணவிகள் தங்குவதற்கு, தங்கும் விடுதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு விடுதி பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர வேண்டும். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பலர்செலவு செய்ய இயலாத குடும்ப சூழ்நிலையில் உள்ளவர்களை, கண்டறிந்து அரசு  ஊக்குவித்து, பயிற்சிகள் வழங்க வேண்டும் இதன் மூலம் தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கலாம். யோகா போன்றவற்றை துவக்கப்பள்ளி நிலையிலிருந்தே துவங்க வேண்டும்.
மாணவர்கள் கையடக்க செல்பேசியிலிருந்து மூழ்கி உடற்பயிற்சியை மறந்து,  ஆன்லைன் கேம்மின் விளையாடி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இந்த நிலையை மாற்றி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்டிப்பாக விளையாட்டு வகுப்பு    நடத்த வேண்டும். என்று மாண்புமிகு முதல்வருக்கு கோரிக்கை விடுப்பதுடன். அதே சமயம் எனது  ஜெயங்கொண்டம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் 10 ஏரிகளை மேம்பாடு  9.60கோடி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 3.80 கோடி, பேவர்பிளாக் சாலை – 298 கோடி,பூங்கா அமைத்தல் 1.34 கோடி, கூடுதல் புதிய பேருந்து நிலையம் அமைக்க  2.25கோடி, கூடுதல்  19.97 கோடி உடையார்பாளையம் பேரூராட்சியில் சந்தை மேம்பாடு 2.70 கோடி.,ஏரி சீரமைத்தல் 26.00 இலட்சம்.,பேவர்பிளாக் சாலை 1.75கோடி.தார்சாலை மேம்பாடு 55.50 லட்சம். பூங்கா அமைத்தல்  24.20 லட்சம்.கூடுதல் – ரூ.5.50 கோடி. வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் பேவர்பிளாக் சாலை அமைத்தல் – ரூ. 60.00 இலட்சம்.ஏரிகளை மேம்பாடு செய்யும் பணி 1.03.கோடி.ஆக மொத்தம் ஜெயங்கொண்டம் தொகுதியில் 375.25 கோடி ரூபாய்க்கு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றிய முதல்வரு க்கு  நன்றி தெரிவித்து க்கொள்கிறேன் என்று கூறினார்.