தேனி அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ள மீறு சமுத்திரம் கண்மாயை பொழுதுபோக்கு அம்சங்களுடன் மாற்றுவதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பின்படி நீர்வளத்துறை சார்பில் 7.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் இன்று துவக்கப்பட்டது.

இதற்காக பூமி பூஜைகள் செய்து திட்டப் பணிகள் துவக்கும் நிகழ்ச்சி கண்மாய் கரைப்பகுதியில் நடைபெற்றது இதில் தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், நகராட்சி மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
7.40 கோடி ரூபாய்க்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் மீறுசமுத்திரம் கண்மாயினை பலப்படுத்தி தடுப்புச் சொல் எழுப்பி வேலி அமைக்கும் பணி, கண்மாயில் உள்ள ஆகாய தாமரையை அகற்றி படகு சவாரி மற்றும் பூங்கா விளையாட்டு கருவிகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது

மேலும் இந்தத் திட்டத்தில் சிறுவர்கள் பூங்கா, நவீன வசதிகளின் கூடிய கழிவறை, அலுவலகம், உணவு கூடம், படகுகள் நிறுத்துமிடம் உள்ளிட்டவையும் கட்டுப்பட உள்ளது
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பறவைகளுக்காக “பறவைகள் தீவு” அமைக்கும் பணியும் இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது என நீர்வளத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




