திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற விவகாரங்கள் , மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று பழனி வந்தடைந்தார்.

மாவட்ட நிர்வாகம் சார்பாக கோட்டாட்சியர் , வட்டாட்சியர் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பாக உதவி ஆணையர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்
இன்று மதியம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மலைக் கோயிலுக்கு ரோப் மூலமாக குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பான மரியாதை செய்யப்பட்டது

பின்னர் போகர் சன்னதிக்கு சென்று வழிபட்டார் மக்களுடன் கலந்துரையாடினார் ,
பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.