• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக தைப்பூச சிறப்பு யாகம்

ByA.Tamilselvan

Dec 20, 2022

தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கு பழனி முருகன் கோயிலில் தைப்பூச சிறப்பு யாகம் நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். வெகுவிமரிசையாக நடக்கும் இந்த திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் வர தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், திருவிழாவுக்கு அனுமதி பெறுவதற்கும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், பூர்ணாகுதி, கலச புறப்பாடு, கலச அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்கு அனுமதி பெறப்பட்டது. அதன்பிறகு மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் பக்தர்கள் நலனுக்காக வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை நடைபெறுகிறது.