• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கனடா இந்து கோவிலை சேதப்படுத்திய பயங்கரவாதிகள்

Byகாயத்ரி

Sep 16, 2022

கனடாவில் உள்ள முக்கியமான இந்து கோவிலில் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி அந்த கோவிலையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோவில் சுவரில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகங்களை கண்ட இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சதிச் செயலை செய்தவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணை செய்து வருவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்திய உயர் ஆணையரகம் கேட்டுக் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா எம்பி சோனியா சித்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.