• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ..பரபரப்பு

கூடலூர் நாடு காணி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ 5 ஏக்கர் புல்வெளிகள் எரிந்து சாம்பல் காட்டு தீயின் நடுவே வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக பணிப்பொழிவு காணப்படுவதால் பகல் வேளையில் அதிக வெயில் காணப்படுகிறது இதனால் செடிகள் புல்வெளிகள் பணியில் கருகி காய்ந்து கிடப்பதால் காட்டு தீ பரவும் நிலை உள்ளது.கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ளதால் அப்பகுதி முழுவதும் மரம் செடிகள் புல்வெளிகள் காய்ந்து கருகி கிடைக்கும் நிலையில் இன்று கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனப்பகுதியில் ஐந்து ஏக்கர் புல்வெளிகள் திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. இதனை அறிந்த பந்தலூர் வனச்சரகர் சஞ்சீவி தலைமையில் வனத்துறையினர் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர அனைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது காட்டுத் தீயின் நடுவே பயங்கர வெடி சத்தம் கேட்டதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தீ பற்றிய பகுதிகளை ஆய்வு செய்தபோது பாறைகளுக்கு வைக்கும் வெடிப்பொருள்கள் அப்பகுதியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இப்பகுதி தங்க சுரங்கம் அருகில் உள்ள பகுதி என்பதால் தங்கம் எடுப்பதற்காக வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என்று வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் வெடி பொருள்கள் வெடித்து சிதறியதால் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.