சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் கண்ணன் என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருககின்றனர்.

இந்நிலையில் தீக்குச்சியில் பாஸ்பரஸ் ரசாயன மூலப்பொருளை செலுத்தும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக தொழிலாளர்கள வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது.

தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தீக்குச்சி, ரசாயன பொருட்கள் தீயில் எரித்து சேதமானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






