• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு..!

Byவிஷா

Aug 17, 2023

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்காக மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கியது. இதையொட்டி திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரைத் தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை., எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில், மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றுள்ளது. எனவே இந்த மருத்துவமனையை 33 மாதங்களில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.