இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் அருள்மிகு தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்ததருளிய சுவாமி திருக்கோவில் தேரோட்ட திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறை சேத்தூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் வைகாசி தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது .

முன்னதாக கொடி மரத்தின் முன்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்கிய பின் மஞ்சள் திராவிய பொடி . பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்ட முதல் நாள் நிகழ்ச்சி தொடங்கியது ஒவ்வொரு நாளும் சாமி வீதி உலா நடைபெறும் ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்ட திருவிழா முக்கிய நிகழ்வாக கடைபிடிக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படும் விழா ஏற்பாடுகளை சேத்தூர் ஜமீன்தார் பரம்பரை அறங்காவலர் துரைரத்தினகுமார் .மற்றும் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.