திருப்பரங்குன்றம் நிலையூரில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் நிலையூர் ரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத வாலிபர் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து தண்டவாளத்தில் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிந்தது.
அதன் பேரில் மதுரை ரயில்வே எஸ்ஐ கேசவன் மற்றும் போலீசார் வந்து விசாரித்த போது,மதுரை மேல அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (வயது 24) இவரும், இவரது தந்தையும் இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர்.
மகன் மணிகண்டனுக்கும், தந்தைக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
மணிகண்டனுக்கு போதை பழக்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மணிகண்டன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து நிலையூர் ரோட்டில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, நள்ளிரவில் வந்த ரயில் முன்பாக தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மணிகண்டன் உடலை கைப்பற்றி இரயில்வே போலீசார் உடற்கூறு பரிசோதனைக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில்வே போலீஸார் அதன் பின்பு மணிகண்டன் அணிந்திருந்த சட்டை, கைலி மற்றும் இரு சக்கர வாகனத்தின் எண்ணை வைத்து இவர் குடியிருந்து வரும் பகுதி முகவரி தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு சென்று விசாரித்த இரயில்வே போலீஸாருக்கு மேற்கொண்ட விவரம் தெரியவந்தது.
இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.