• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

ByKalamegam Viswanathan

Jan 29, 2025

சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

மதுரை மாவட்டம் திருவேடகம், சோழவந்தான் ஆகிய வைகை ஆறு கரை பகுதிகளில் தை அமாவாசை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்தனர். சோழவந்தான் அருகே திருவேடகம் படித்துறை பகுதியில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து திருவேடகம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.

தைஅமாவாசை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களுக்கு கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாலகிருஷ்ணன் அய்யர் உள்பட 20க்கு மேற்பட்ட வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓதினர். திருவேடகம் சீரடிசாய்பாபா கோவில்முன்பாக வைகைஆற்று கரையில் தங்களது முன்னோர்களுக்காக பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். தை, ஆடி மற்றும் புரட்டாசியில் வரக்கூடிய அமாவாசைகளில் திருவேடகத்தில் மதுரை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்துசுமார் 10,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வருடம் தோறும் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். வைகை ஆற்று படித்துறையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தனர். தர்ப்பணம் கொடுத்தவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.

மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமத்தில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் பல்வேறு வாகனத்தில் வந்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் காமாட்சி, முத்து மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். இதே போல் சோழவந்தான் வைகை ஆறு படித்துறை விநாயகர் கோவிலில் கார்த்தி ஐயர் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களுக்கு மந்திரம் ஓதினார். தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர்.