தமிழகத்தைச் சேர்ந்த தான்யா நாயுடு, கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான Miss P&I Reality Show போட்டியில் பங்கேற்று இறுதி சுற்றில் வெற்றி பெற்று சென்னை விமான நிலையம் திரும்பி அவர்களுக்கு குடும்பத்தார்கள் நண்பர்கள் உற்சாக வரவேற்பு
கடந்த மாதம் நடைபெற்ற Namith South Queen 2025 பட்டத்தை வென்றதும், இவரது சிறப்பான சாதனைகளில் ஒன்று.

வரும் பிப்ரவரி மாதம், அமெரிக்காவில் நடைபெறவுள்ள Reina Hispanoamericana 2025 உலக அழகிப்போட்டியில், 30 ஆண்டுகள் கழித்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமையை தாங்கி பங்கேற்க இருப்பது, நமது நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
கோவாவில் நடைபெற்ற Miss P &I Reality Show, அழகி போட்டியாளர்களின் ஆளுமை, நோக்கம், மாற்றம், வளர்ச்சி மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் தனிச்சிறப்புடன் நடைபெறும். இப்போட்டியில் பெருமை, தைரியம் மற்றும் கவர்ச்சியை எடுத்துக்காட்டும் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதே இதன் முக்கிய நோக்கம். மேலும் இதில் தான்யா நாயுடு வெற்றி பெற்றிருப்பது, அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்.
வெற்றி பற்றி பிக்பாஸ் மற்றும் மாடலிங் துறையில் பிரபலமான நமிதா மாரிமுத்து பெருமிதத்துடன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தது:
“பொதுவாக நான் வெற்றி பெற்று கிரீடம் சூட்டி விமான நிலையம் திரும்புவேன். ஆனால், இப்போது என் மாணவி தான்யா நாயுடு வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அவர் Namith South Queen 2025 பட்டத்தை வென்றதும், இப்போது அமெரிக்காவில் நடைபெறவுள்ள Reina Hispanoamericana 2025 உலக அழகிப்போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தப் போவது எனக்கு பெருமை அளிக்கிறது.
தான்யா இந்த உலகப்போட்டியிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன். அவருக்கு முழு ஆதரவையும் நாங்கள் வழங்குவோம். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.” என கூறினார்.