வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூர் நகர தமுமுக சார்பாக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் முன்னோர்கள் வழங்கிய தான சொத்துக்களை பறிக்கும் நோக்கில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி தேனி தெற்கு மாவட்டம் சின்னமனூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று மதியம் சின்னமனூர் பெரிய பள்ளிவாசல் முன்பு நகரத் தலைவர் முகமது கோயா தலைமையில் கருப்பு பட்டை அணிந்து மாபெரும் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் மௌலவி முகம்மது ஹனிபா பத்ரி கிராத் ஓதினார். தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார் வரவேற்புரை நிகழ்த்தினார். தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் ரஃபீக் அஹமது, சின்னமனூர் முஹம்மது நைனார்ஷா பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி முஹம்மது ஆதம் ரஷாதி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், ஒன்றிய அரசின் சிறுபான்மை விரோத செயலை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் முகமது ரபீக், மாவட்ட பொருளாளர் ஹபிபுல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் சிராஜ்தீன்,ஹக்கீம், விஜயகுமார், இளைஞரணி செயலாளர் பைசூர் ரஹ்மான், சின்னமனூர் நகர தமுமுக செயலாளர் இமாம், மமக செயலாளர் முகமது இஸ்மாயில், பொருளாளர் ராஜாமுகமது, துணை தலைவர் சாகுல் ஹமீது, கிளை தலைவர் ராஜா முகமது செயலாளர் அப்துல் அஜீஸ்,கம்பம் நகரத் தலைவர் அன்சாரி, பொருளாளர் ஜெய்லானி,கிளை தலைவர் ஆசிக்குதா மற்றும் சின்னமனூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்திலும்,மாநிலங்கள் அவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஜமாத்தார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.