• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உதயநிதி மீது நடவடிக்கை கோரி தமிழக வெற்றி கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்…

BySeenu

Aug 4, 2026

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தின் கோவை மாநகர் மகளிர் அணி சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றி கழக மகளிர் அணி இந்த புகாரை அளித்தது.

இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்று திரண்டு, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி கண்டனத்தை தெரிவித்தனர். பின்னர், காவல் ஆணையரிடம் புகார் மனுவை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் கோவை மாநகர் மகளிர் அணி அமைப்பாளர், ஜெயஶ்ரீ “பெண்களையும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யையும் விமர்சித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை உரிய வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.