சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் செயலாளர் முத்தரசன் இவ்வாறு கூறினார்.
மேலும்,வரும் 18வது பொது தேர்தல் இந்திய ஜனநாயகத்தை காக்கும், அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பின்மையை காக்கும் தேர்தல் என மக்கள் எண்ணி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முத்தரசன், திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு காரணம் அது கொள்கைக்கான கூட்டணி என்று கூறினார்.
பாஜக- பாமக கூட்டணி மகா சந்தர்ப்பவாத கூட்டணி என்றவர், பாஜகவின் கொள்கைகளை தூக்கி பிடித்ததால் அதிமுக எல்லா கதவுகளையும் திறந்து வைத்தும் யாரும் அங்கு செல்லவில்லை என்றும், மோடி தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து விட்டு அநாகரிகமான, நாலாம் தர மனிதர் போல மேடையில் பேசி வருகிறார் என்றும் கூறினார்.