• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விஜயகாந்தின் 70 வது பிறந்தநாளுக்கு தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை வாழ்த்து…

Byகாயத்ரி

Aug 25, 2022

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் 70ஆவது பிறந்தநாளையொட்டி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பதிவில், “வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் “சகாப்தமாக” “கேப்டனாக” “மரியாதை”யுடன் “நெறஞ்ச மனசு”டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.