தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ரமணி வகுப்பறையிலேயே படுகொலை. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இன்று ( 20.11.2024 ) தஞ்சாவூர் மாவட்டம் சின்னமனை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ரமணி அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்ற வாலிபர் வகுப்பறையில் புகுந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் ஆசிரியர்கள் அச்சத்துடன் பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. இதபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அகில இந்திய அளவில் எப்படி மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறதோ அதேபோன்று ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்றி ஆசிரியர்கள் மீது பேரன்புக் கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

மேலும் ஆசிரியர் ரமணி அவர்களை படுகொலை செய்த மதன்குமாருக்கு உச்சபட்ச தண்டையை விரைந்து பெற்று தந்து இனி இதுபோன்ற சம்பவம் நடக்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியை ரமணியை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பிலும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.