ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் குரு பூஜையில் பங்கேற்பதற்காக தேனியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு வாகனங்களில் அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இம்மானுவேல் சேகரனின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் பாலா
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் குரு பூஜையை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்கப்பட வேண்டும்.
தேவேந்திர குல வேளாளர் சமய மக்கள் அதிகமாக வசித்து வரும் தேனி மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு திருவுருவச் வெண்கல சிலை அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.