கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்கப்பட வேண்டும் பனை பொருளாதாரம் முதன்மை மாநிலம் ஆகும் என்பதை வலியுறுத்தி கரூரில் இன்று தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் அரசியில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது அரசினுடைய கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாகும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை மூலமாக தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் புகாரை கடிதமாக தபால் அனுப்பினர்.

கரூர் தலைமை தபால் நிலையம் அலுவலகம் முன்பு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு தமிழகத்தில் கள்ளுக்கு விழித்திருக்கும் தடையை நீக்க வலியுறுத்தியும், பனை பொருளாதாரம் முதன்மை மாநிலம் ஆகும் என்பதை வலியுறுத்தியும், தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை மூலமாக தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் புகாரை கடிதமாக தபால் அனுப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது
கள் விடுதலையும் அரசியல் கட்சிக்கு உடன்பாடு என்றால் அதை கள் இயக்கம் வரவேற்கும் முரண்பாடு என்றால் வாதத்திற்கு வருமாறு அழைக்கும்

இந்த வாத விவாதத்தில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால் கள் இயக்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் தோல்வியை ஒப்புக் கொள்ளும் ஒரு தலைவர் வாதிட்டு வெற்றி பெறும் பட்சத்தில் வரக்கூடிய 2026 ல் அவரது கட்சி வெற்றி பெறும் பிரகாசமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டிற்கும் நாங்கள் தயாராக இல்லை என்றால் எதற்காக உங்கள் கட்சி எதற்காக உங்களுக்கு தலைவர் பதவி கள் இயக்கம் ஒன்றிணைந்து கேள்வி கேட்கும் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இது எதிரொலிக்கும் கள்ளுக்கு ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் கள் இறக்கி சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் போராளிகள் அரசியல் அமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசு மதுவிலக்கு சட்டப்படி போராளிகள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சட்டத்திற்கு புறம்பாக கலையங்களை உடைக்கின்றார்கள், பாலைகளை சேதப்படுத்து கின்றார்கள்
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் மதுவிலக்கு சட்டத்திற்கும் எதிரானது இந்த போக்கை அவர்கள் கண்டிக்க வேண்டும் கள்ளுக்கு ஆதரிக்கும் கட்சிகள் கள் இயக்க போராளிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கு விதித்திருக்கக்கூடிய தடையை நீக்குவோம் என சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது.
முந்தைய எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக கோவன் போன்றவர்களை ஏவி விட்டு ஆடிய ஆட்டம் கொஞ்சமா நெஞ்சமா கனிமொழி அவர்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக விதவைகள் உள்ளனர் என தேர்தல் நேரத்தில் தெரிவித்தார்.
இதற்குக் காரணம் டாஸ்மாக் மதுக்கள் ஆகவே அது ஒழிக்கப்பட வேண்டும். அதனை சொல்லி நான்கு ஆண்டுகள் ஆகியும் அதை முன்னிறுத்தி ஆட்சியில் அமர்ந்தார்கள் ஆகவே இவர்களை எப்படி நாங்கள் நம்புவது.
இன்று அரசியல் அமைப்பு சட்டத்தை முன்னிறுத்தி போராளிகள் கள் இறக்கி சந்தைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக கள்லை ஆதரிக்கும் கட்சிகள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களுக்கு வைக்கின்றோம்.