• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு

Byவிஷா

May 22, 2024

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நாளை மறுநாள் (மே 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இதனால் மழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இன்று காலை தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியது. இது நாளை மறுநாள் (மே 24) காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மழை மேலும் தீவிரமடையும்.
இதனால் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மேலும், மே 22 மற்றும் 23ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், கேரளாவில் அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.