• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில்தான் அதிக சாலை விபத்துக்கான ப்ளாக் ஸ்பாட்ஸ் உள்ளன: மத்திய அமைச்சகம்

இந்தியாவிலேயே அதிகளவில் விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் நாட்டிலேயே தேசிய நெடுஞ்சாலைகளில் தான் அதிக ப்ளக் ஸ்பாட் உள்ள மாநிலம் தமிழ்நாடு என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலின்படி, தமிழ்நாடு 748 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேற்கு வங்கம் (701) மற்றும் கர்நாடகா (551) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.


அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, 2016 முதல் 2018 வரை தேசிய நெடுஞ்சாலைகளில் கண்டறியப்பட்ட மொத்த ப்ளக் ஸ்பாட்’ எண்ணிக்கை 5,803 ஆகும்,” என்று அவர் கூறினார்.
இறப்பு விகிதங்கள் மற்றும் மாநிலங்கள் சமர்ப்பித்த விபத்து தரவுகளின் அடிப்படையில், MORTH-இன் போக்குவரத்து ஆராய்ச்சி பிரிவு மூலம் ப்ளக் ஸ்பாட் அடையாளம் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 2016 ஆம் ஆண்டில் 5,755 விபத்துக்கள் மற்றும் 2074 இறப்புகள், 2017 இல் 5752 விபத்துக்கள் மற்றும் 2096 இறப்புகள், 2018 ஆம் ஆண்டில் 5071 விபத்துக்கள் மற்றும் 1796 இறப்புகள் நிகழ்ந்துள்ளது.


ப்ளக் ஸ்பாட் என்பது மோசமான சாலை வடிவமைப்பு மற்றும் போதிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததன் அறிகுறியாக கருதப்படுகிறது.
“தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தவிர்ப்பதற்க்காக , தேவைப்படும் இடங்களில் மேம்பாலம், சுரங்கப்பாதைகள், நடைமேம்பாலம், சர்வீஸ் சாலைகள் போன்ற நடவடிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


மேலும் ஒவ்வொரு பிளாக் ஸ்பாட் இடமும் பிராந்திய அலுவலகங்களின் சாலைப் பாதுகாப்பு அலுவலர்கள், சம்பந்தப்பட்ட PIU இன் திட்ட இயக்குநர் மற்றும் இண்டிபெண்டண்ட் இன்ஜினியர்ஸ், ஆத்தாரிட்டி இன்ஜினியர்ஸ், பாதுகாப்பு ஆலோசகர்கள் உள்பட சாலை பாதுகாப்பு நிபுணர்கள் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கின்றன.

அதன் அடிப்படையில் பிராந்திய அலுவலரால் அனுமதி வழங்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


NHAI ஆனது ப்ளக் ஸ்பாட்களை சரிசெய்வதற்கான முன்மொழிவு தயாரிப்பது, சாங்ஷன் வழங்குவது மற்றும் பணிகளை நிறைவேற்றுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களின் கீழ், அனுமதிக்கு கோப்புகளை தலைமையகத்திற்கு அனுப்பாமல், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ப்ளக் ஸ்பாட்’களை சரிசெய்வதற்காக பிராந்திய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி வரை நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.