• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசின் புதிய திட்டமான உங்களை தேடி உங்கள் ஊரில்.

தமிழக அரசின் புதிய திட்டமான உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் முதல் நிகழ்வை குழித்துறை அரசு மருத்துவ மனையில் ஆய்வு.

குமரி ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் சென்று பல்வேறு சிகிச்சைகளுக்காக, மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக தங்கி மருத்துவம் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் பார்த்து பேசியதுடன், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.

பிரசவ பிரிவில் இன்று பிறந்த குழந்தைகளை பார்த்ததோடு, குழந்தையின் தாய் இடமும் நலம் விசாரித்தார்.

உள் நோயாளிகளை பார்த்த பின் மருத்துவ கல்லூரி டீன் உட்பட பல்வேறு பிரிவு மருத்துவர்களிடம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதிய திட்டமான “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம் குறித்த விழிப்புணர்வை அரசின் ஒவ்வொரு துறை சார் அதிகாரிகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் ஆட்சியர் ஸ்ரீதர்.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் குறித்த ஆய்வை ஆட்சியர், மார்த்தாண்டம் அரசு மேல் நிலைப் பள்ளியினையும், குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் முகாம்களையும் ஆய்வு செய்தார்.