• Mon. Apr 29th, 2024

காந்தியின் நினைவுதினத்தில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர்

குமரி மாவட்டம் முழுவதிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76_வது நினைவு தினத்தை அனுஸ்டித்த தினத்தில் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் ரூ.10,000.00 லஞ்சம் வாங்கிய போது குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் கையும், களவுமாக பிடித்தார்.

பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் இடம், திட்டுவிளை பகுதியை சேர்ந்த சுந்தரம் (67) அவரது தாயார் பெயரில் உள்ள பூர்வீக சொத்தில் உள்ள வீட்டின் உரிமையை சுந்தரத்தின் பெயருக்கு உரிமையை மாற்ற கோரி கடந்த (ஜனவரி_3)ம் தேதி விண்ணப்பம் கொடுத்து உள்ளார்.

பொங்கல் விடுமுறை முடிந்து சம்பந்தப்பட்ட பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகம் சென்று செயல் அலுவலர் பாலசுப்பரமணியத்தை பார்த்து அவரது மனு குறித்து பேசிய போது, வீட்டின் உரிமையை சுந்தரத்தின் பெயருக்கு அரசு பதிவேடுகளில் மாற்ற வேண்டும் என்றால் ரூ.10,000 தந்தால் தான் உரிமையை மாற்றி தருவேன். பணம் தராவிட்டால் பணி காலதாமதம் ஆகும் என தெரிவித்ததை கேட்டதும், சுந்தரத்திற்கு ஒரு பதட்டம் அவருள் ஏற்பட்டிருக்கிறது. பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சுந்தரம். தாய் வழி பூர்வீக சொத்தான வீட்டிற்கு முழுவதும் அவரே உரிமையாளராக இருந்தும், சட்டப்படியான அவரது உரிமைக்கு எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என இதயத்தில் கேள்வி, பதில் போன்ற கோணங்களில் எழ…

பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்தின் முகவரி பற்றி விசாரிக்க, பாலசுப்பரமணியனின் வீடு ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ளதாக தெரியவந்தது.

சுந்தரம் தன்னிடம் லஞ்சம் கேட்ட பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் பற்றிய புகாரை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ்யிடம் புகார் கொடுத்தார்.

காந்தியின் 76_வது நினைவு தினமான (ஜனவரி_30) பிற்பகல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கொடுத்த பணம் 10,000 த்தை, சுந்தரம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் இடம் பணத்தை கொடுத்த போது, குறிப்பிட்ட அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்து பாலசுப்பிரமணியம் லஞ்சம் பணத்தை வாங்கியதும் கைது செய்தனர். பிற்பகல் நேரம் என்பதால் அலுவலகத்தில் பணியாளர்கள் மட்டுமே இருக்க பொது மக்கள் அதிகம் இல்லாத நேரத்தில் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டார்.

பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் கைதான செய்தி நொடி நேரத்தில் வெளியே பரவ, பொது மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய கருத்து பணத்தாளில் தேசத் தந்தை காந்தியின் படம் உள்ள பணத்தை, காந்தியின் 76_வது நினைவு தினத்தில் லஞ்ச பணமாக வாங்கியுள்ளதை பொது மக்களின் மத்தியில் ஒரு அலசலாக அரசு அதிகாரிகள் மத்தியிலும் உலா வந்ததை காண முடிந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் 10000/- ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.. இது பற்றிய கூடுதல் தகவல் வருமாறு…
புதுப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவரிடம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சுந்தரம் வயது 67 என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள பூர்வீக சொத்தில் உள்ள வீட்டின் உரிமையை தனது பெயருக்கு மாற்ற கோரி கடந்த ஜனவரி மூன்றாம் தேதி விண்ணப்பித்து உள்ளார். ஆனால் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் அவரது விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு வைத்து உள்ளார். இந்நிலையில் சுந்தரம் நேற்று பூதப்பாண்டி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து விவரம் கேட்டபோது ரூபாய் 10 ஆயிரம் தந்தால் மட்டுமே வீட்டின் உரிமையை பெயர் மாற்றம் செய்து தர முடியும் என்று கறாராக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுந்தரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்களிடம் புகார் கொடுத்து உள்ளார். இந்நிலையில் மேற்படி சுந்தரம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் (30-01-2024) சுமார் மூன்றே கால் மணி அளவில் ரூபாய் பத்தாயிரம் லஞ்சப்பணம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த குமரி லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் அவர்கள் செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் லஞ்சம் வாங்கும் போது அவரை கையும் களவுமாக பிடித்தார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பின்னர் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்தின் வீடு, ஆரல் வாய்மொழி பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கும் சோதனை முடிவற்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *