• Mon. Apr 29th, 2024

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மழை பகுதியில் நேரடி ஆய்வு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை நீடிப்பதால், பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு. அணைகளில் இருந்து நான்காயிரம் கன அடி உபரி நீர் திறப்பு.. மழை பெய்து வருவதால் மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அணைகளில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று மாலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பி விட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி, ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேசிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73 அடியாகவும் உள்ளது . தற்போது மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு சுமார் எட்டாயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து மூன்றாயிரம் கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீரும் உபரி நீராக திறந்து விடப்பட்டது. கன மழை பெய்து வருவதை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சார் ஆட்சியர் கெளசிக் ஆகியோர் ஆய்வு செய்தனர். மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் பால்வளத்துறை மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *