• Mon. Apr 29th, 2024

குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு…

குமரி மாவட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு. நாகர்கோவில் கே.எஸ்.அழகிரி பேச்சு..,

நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ்.அழகிரி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மற்றும் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், முன்னாள் இணை அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதரணி, ஆர்.ராஜேஸ்குமார், செல்வபெருந்தகை இவர்களுடன் மாநில குமரி மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, குமரி மாவட்டம் எப்போதும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. பெரும் தலைவர் காமராஜர் 1969-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், அடுத்து 1971-ல் நடை பெற்ற பொது தேர்தலில் அன்றைய நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றவர். நாம் எல்லாம் தலைவர் காமராஜ்-யை பெரும் தலைவர் என்ற அடையாள பெயருடன் விழித்த காலங்களில், குமரி மாவட்டம் மக்கள் மட்டுமே நம் தலைவரை அப்பச்சி காமராசர் என அழைத்த தனித்த பெருமிதம் கொண்டது கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் சமூகம். நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் நாம் ஒரே ஒரு மாநிலத்தில் தான் வெற்றி பெற்றோம் என்றாலும், பாஜக வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் நாம் 40 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.

தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, நீதித்துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகள் சுதந்திரமாக செயல் பட முடியாது.ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எதிர் கட்சிகளை மிரட்டும் செயலில் மோடியின் அரசு தொடர்ந்து செயல்படுகிறது.

நாடாளுமன்ற கட்டிடத்தின் உள்ளே வண்ண புகை குண்டுகளை வீசியது குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்னர்களை வெளியேறிய செயல். இந்திய கடந்த 60-ஆண்டுகளாக காப்பாற்றிய ஜனநாயகத்திற்கு விடுத்துள்ள சவால்.

நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசியவர்களுக்கு பாஸ் கொடுத்த பாஜக உறுப்பினர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது தான் மோடியின் சர்வாதிகார போக்கின் அடையாளம்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடாக தொடர வேண்டும்.ஒரு தனிமனிதனின் மதம் மற்றும் பேச்சு, எழுத்து, வாக்களிக்கும் உரிமைக்கு எதிரான பாஜகவின் செயல் திட்டத்தை முறி அடித்து. இந்தியா கடந்த 60-ஆண்டு பின்பற்றிய ஜன நாயக உரிமைகள் தொடர.

நாக்பூரில் எதிர் வரும் டிசம்பர் 28-ம் நாள், காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப்பெரிய பேரணி நடக்க இருக்கிறது. நாக்பூரில் பல்வேறு செயல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி முழு தயார் நிலையில் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைவர் ராகுல் காந்தி, அன்னை சோனியா காந்தியின் வழி காட்டுதலில் இந்தியாவில் ஆட்சி அமையும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *