• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்…இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் கோரிக்கை!

ByJeisriRam

Sep 23, 2024

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தின் தேனி மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு பெரியகுளம் மாங்கனி மகாலில் மாவட்ட தலைவர் சி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட செயலாளர் பி.மணிகண்டன், கே.பிச்சைமுத்து எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டின் துவக்க உரை மாநில துணை செயலாளர் நா.ஜெகநாதன் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் RPI திரு.கே.தன்ராஜ் Ex Mc அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். தமிழ் மாநில தலைவர் இரா.அன்புவேந்தன் மாநாட்டுக்கு சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் தமிழ்நாடு தமிழ்நாட்டில் பேரூராட்சிகள் நகராட்சிகள் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்ற தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களையும் அவுட் சோரசிங் முறை என்பதை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது மற்றும் தேனி மாவட்டத்தில் தூய்மை பணி செய்து வருகின்ற எஸ்சி எஸ்டி தொழிலாளர்களை சாதி ரீதியாக பல்வேறு வகையான அடக்குமுறைகள் அதிகாரிகளாலும் ஆதிக்க சாதியைச் சார்ந்த அரசியல்வாதிகளும் நித்தம் அவர்கள் மீது வன்கொடுமை நடத்தப்படுவது தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை எஸ்சி எஸ்டி தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கையில் எடுப்பதில்லை.

காவல்துறையை கையில் வைத்திருக்கிற முதலமைச்சர் இது போன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தி நீங்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற வகையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் வன்முறைகளில் இருந்து எஸ்சி ,எஸ்டி மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மாநாட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இத்துடன் 12 தீர்மானங்கள் நிறைவேற்றி தீர்மானங்களை தமிழ்நாடு அரசுக்கு அளித்ததோடு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழகத்தில் அனைத்து துப்புரவு தொழிலாளர்களின் ஒருங்கிணைத்து மாநில அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இம்மாநாட்டின் வெற்றிக்காக சிறப்பாக உழைத்திட்ட கே.பிச்சைமுத்து மாவட்ட செயலாளராகவும், இதுவரை மாவட்ட செயலாளராக பணியாற்றிய மணிகண்டன் மாவட்ட அமைப்பாளராகவும் மாநில குழுவின் சார்பில் அறிவிக்கப்படுகிறது.