• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு… அதிர்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள்

தமிழகத்தில் பணியிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை ஜனவரி 31-க்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசியல் வாதிகளின் சொத்து விபரங்கள் மற்றும் குற்ற பின்னணிகளை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அது போல தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சொத்து விபரங்களை பதிவு செய்யவேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், முறையான காரணமின்றி சொத்து விவரங்களை பதிவு செய்யாமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.


இது அதிகாரிகளின் ஒழுங்கு நடவடிக்கைக்காக எடுக்கப்பட்டமுதற்கட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.