• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Mar 13, 2025

நாளை தொடங்குகின்ற நிதிநிலை அறிக்கையில் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் இடம்பெற செய்ய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் – கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர சென்ற ஆட்சியில் கோரிக்கை வைத்து போராடியபோது சுமார் 5000 ற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு பணியிடை நீக்கம் செய்தும் பல ஆயிரம் பேரை பணியிடம் மாற்றம் செய்து பந்தாடினார்கள். இந்நிலையில் போராட்டக்களத்திற்கே நேரடியாக வந்து நீங்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட வேண்டாம் நான் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிறேன் என சூளுரை ஆற்றினீர்கள். அதனை பறை சாற்றும் பொருட்டு சென்ற ஆட்சியில் பழைய ஓய்வூதியம் கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் 5000ற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்து துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்தார்கள். பல ஆயிரம் பேரை பணியிட மாற்றம் செய்தார்கள்.

இதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் . சொன்னதை நிறைவேற்றும் பொருட்டு ஆட்சிக்கு வந்தவுடன் துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்தும் வழக்குகளை திரும்ப பெற்றும் பணியிட மாற்றம் செய்தவர்களை அதே இடத்தில் பணயமர்த்தும் பொருட்டு பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளித்தீர்கள். போராட்டக்காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப் பலன்களை வழங்கினீர்கள். நிதிநிலை சீராக சீராக படிப்படியாக ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேற்றுவேன் என அறிவித்து சென்ற ஆட்சியில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலை படியை நிதிநிலைக்கு ஏற்ப ஆறு மாதம் கழித்து வழங்கி பின்பு ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படியை உயர்த்துகிறதோ அதே தேதியிட்டு வழங்குவேன் என அறிவித்து அகவிலை படியை உயர்த்தி வழங்கி வருகிறீர்கள்.

இதே நிலையில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவதற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இடம்பெறும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் 2009 இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஊதிய முரண்பாடு பிரச்சனை , 12 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்களையும் பணி நிரந்தரம் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் மீண்டும் வழங்குதல் , பல்வேறு துறைகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள்.

அதாவது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களை சிறப்பு கால முறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியமாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காவலராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் திகழ்ந்தாரோ அதே வடிவில் தான் தங்களை காண்கிறார்கள். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க இந்தியாவின் முதன்மை முதலைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.