புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பி எல் ஏ ரவுண்டானா அருகில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பாக, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயில் கார்னரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர்கள் அருள்மொழி அஞ்சலை ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தை சேர்ந்த ராஜாஜி யோகம் மலர் கற்பகம் ஆகிய துணைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அரசு குடியிருப்பில் குடியிருக்கும் தங்களுக்கு வீட்டுக்கான வாடகையை பிடித்து செய்யக்கூடாது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
