சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுற்று பயணம் மேற்கொள்ளும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆசா அஜீத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர்ஆஷா அஜீத் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். அவரோடு கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை வருகை தந்து, ரூ.40 கோடி மதிப்பிலான தடுப்பணை கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட எல்லையான திருப்புவனத்தில் மாவட்ட திமுகவின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்புவனம் அருகே உள்ள கானூர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் இணைந்து நேரில் பார்வையிட்டார்.
பணிகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நிலவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதல்வர், பணிகள் தரம் குறையாமல் விரைந்து முடிக்கப்பட வேண்டும் எனவும், அவை பொதுமக்களுக்கு பயன்படக் கோரியும் உத்தரவிட்டார்.