மதுரை மாநகராட்சியில் தற்போது பொறுப்பிலுள்ள மண்டலத் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக ராஜினாம செய்ய தமிழக முதல்வர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடனான நேரடிக் கலந்தாய்வில் கூறியிருந்ததன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுடன் இயங்கி வருகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்குபட்டு மேற்கண்ட வார்டுகள் அனைத்திலும் சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள் உள்ளன. இதற்கான வரி வசூல் பணிகள் இணைய வழியில் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் அதன் பகுதிகளுக்கு ஏற்ப வரி விதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாகவோ அல்லது மாநகராட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தின் வாயிலாகவோ முடிவு மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

வார்டு எண்: 75 டிஎம்டி. பி. பாண்டி செல்வி மண்டலம் 3

வார்டு எண்: 43 திரு. எம். முகேஷ் சர்மாVI மண்டலம்
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் மண்டலம் 2, 3, 4, 5 ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட வரி குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி ஆணையாளரின் விசாரணையில் தெரிய வந்தது. இதில் மாமன்ற உறுப்பினர்களும் மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமன்றி மண்டலத் தலைவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது.
இதற்கிடையே முந்தைய ஆணையாளரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வரி குறைப்பு தொடர்பான அழிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து, தீவிர விசாரணையை நடத்திய போது முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் மண்டலங்களில் தீவிர விசாரணையை நடத்தினர். தற்காலிகப் பணியாளர்கள் மட்டுமன்றி மாநகாட்சியின் பல்வேறு பொறுப்புகளிலுள்ள உயர்நிலை அலுவலர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததை அடுத்து, எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வார்டு எண்: 98 டிஎம்டி வி. சுவிதா மண்டலம் 5
இந்நிலையில் மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் இன்று உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளோடு நேரடிக் கலந்துரையாடலான ‘உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்ச்சியின்போது தேவையான இடங்களில் தயவுதாட்சண்யம் இன்றி பதவியைப் பறிப்பேன் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறிய நிலையில், தற்போது மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வார்டு எண்: 15 டிஎம்டி. ஏ. சரவண புவனேஸ்வரி 2மண்டலம்
கடந்த ஜூன் 1ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவுக்கு ஓரிரு நாட்கள் முன்பாக, மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தையும் அதிரடியாக கட்சியைவிட்டு நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வார்டு எண்: 5 டிஎம்டி. எஸ். வாசுகி
கிழக்கு மண்டலத் தலைவராக வாசுகியும், வடக்கில் சரவண புவனேஸ்வரியும், மத்தியில் பாண்டி செல்வியும், தெற்கில் முகேஷ் சர்மாவும், மேற்கில் சுவிதாவும் தற்போது பொறுப்பில் உள்ளனர். இவர்களில் வாசுகி தவிர மற்ற அனைவரிடமும் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.