• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வீரபாண்டி ராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி!….

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டிராஜாவின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்…

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார் இந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக அஞ்சலி செலுத்தவும் பூலாவரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது

பல்வேறு கட்சி நிர்வாகிகளும் அரசியல் பிரமுகர்கள் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மதுரையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று சேலம் வந்தார் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பூலாவரி சென்ற தமிழக முதலமைச்சர் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து தனது வருத்தத்தை பதிவு செய்து ஆறுதல் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கே என் நேரு எவா வேலு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதி வேந்தன் சுவாமிநாதன் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.