• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72_வது அகவை சிலம்பாட்டம் போட்டி

தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட அளவிலான தனித்திறன் ஒற்றை கம்பு சிலம்பாட்ட போட்டி நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ.காலனியில் உள்ள இவான்ஸ் பள்ளியில் நடந்தது. போட்டி மாநகரச் செயலாளர் பா ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் இணைந்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஜீவா,மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சுரேஷ், வர்த்தக அணி அமைப்பாளர் சி என் செல்வன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ராஜேஷ் குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன்,எல் பி எப் மாவட்ட தலைவர் சிவன் பிள்ளை , மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண் காந்த், விளையாட்டு மேம்பாட்டு அணி துணைஅமைப்பாளர்கள் ஜென்சன்ரோச்,மாணிக்க ராஜா, மாநகர நிர்வாகிகள் ராமதாஸ்,மால்டன்,உசேன், மணிகண்டன், சிபன்,ரமேஷ் ,சுப்பையா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒற்றைக்கம்பு சிலம்பாட்ட போட்டி ஆண்,பெண்களுக்கு 10 ,12, 14, 16 என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது .குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் கிளப்புகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கமும், இரண்டாவது பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கமும், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்பவர்களுக்கு சுழற் கோப்பை வழங்கப்படுகிறது .

இவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது.விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் மகேஷ் அவர்களுடன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளர் சுரேஷ் மனோகரன், முன்னாள் எம்பி தனுஷ் குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.