மேலூர் வந்த தமிழக முதல்வருக்கு வெங்கடேசன் எம். எல். ஏ தலைமையில் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
மதுரை மேலூர் பகுதியில் அமைய இருந்த டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய, தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி முழு வெற்றியடைய நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு மேலூர் உள்ளிட்ட 48 கிராம மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக மதுரை விமான நிலையத்திலிருந்து மேலூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு சோழவந்தான் தொகுதி சார்பாக, வெங்கடேசன் எம். எல். ஏ தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூர் சார்பாக, பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.கே. ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மாவட்ட பிரதிநிதி, பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினர் பேட்டை பெரியசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் பேரூர் துணைச் செயலாளர் கொத்தாலம், செந்தில் செங்குட்டுவன், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையின் தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அமிர்தராஜ், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் சோழவந்தான் பேரூர் 18 வார்டு நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
