தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

நீலகிரி மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு வழியே சாலை மார்க்கமாக வருகை புரிந்தார். கோத்தகிரி டானிங்டன் முதல் ஜான்சன் ஸ்கொயர் வழியே பேருந்து நிலையம் வரை சாலையில் நடந்து வந்து மக்களை சந்தித்தார்.அப்போது ஆயிரகணக்கான திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் கட்டபெட்டு,உதகை சேரிங்கிராஸ் ஆகிய இடங்களிலும் வரவேற்பு அளிக்கபட்டது.நாளை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். அதனை தொடர்ந்து உதகை அரசு கலை கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
அதில் 1703 முடிவுற்ற திட்டப்பணிகளை 495.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்க உள்ளார். மேலும் 130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 102. 17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.