திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களை ஒன்றிணைக்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்னும் மாபெரும் முன்னெடுப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவர் அணி துண்டறிக்கை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பரப்புரை பிரசாரம் கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கருப்புராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை பிரசுரம் செய்தனர்.

இதில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் ராஜதுரை, பஜார் குரு, குமரேச பாண்டியன், ரகுராஜா, பாண்டி, பிரகாஷ், முத்துக்குமார், தெய்வம், அய்யாசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.